குரூப்-4 பகுதி – (இ) தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் எப்படி படிக்கலாம் (How To Study)

 

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
2019 G4 2018 G4 2016 G4 2014 G4
3 3 1 4

 

1. பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது? (2019 G4)
a. கண்ணகி புரட்சிக் காப்பியம்
b. பிசிராந்தையார் ..
c. சுவரும் சுண்ணாம்பும்
d. பாண்டியன் பரிசு

2. நாமக்கல் கவிஞருக்கு “பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்? (2019 G4)
a. நடுவணரசு ..
b. மாநில அரசு
c. ஆங்கில அரசு
d. பிரெஞ்சு அரசு

3. “வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?(2019 G4)
a. தமிழ்நாடு அரசு
b. புதுவை அரசு
c. பிரெஞ்சு அரசு ..
d. ஆங்கில அரசு

4. பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்? (2018 G4)
a. ஜார்ஜ் எல் ஹார்ட்
b. வால்ட்விட்மன் ..
c. லிண்ட் ஹோம்
d. ஹால் சிப்மேன்

5. நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக (2018 G4)
(a)இசை நாவல்கள் 1.நான்கு
(b)புதினங்கள் 2. பத்து
(c)கவிதைத் தொகுப்புகள் 3.மூன்று
(d) மொழி பெயர்ப்புகள் 4. ஐந்து
a. 4 3 1 2
b. 3 4 2 1 ..
c. 2 4 1 3
d. 3 1 4 2

6. குயில் என்ற இதழை நடத்தியவர் (2016 G4)
a. சுரதா
b. வாணிதாசன்
c. பாரதியார்
d. பாரதிதாசன் ..

7. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? (2014 G4)
a. இராமலிங்கம் பிள்ளை
b. கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை
c. பாரதியார்
d. நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் ..

8. `மணிமேகலை வெண்பா`வின் ஆசிரியர் யார்? (2014 G4)                                                a. பாரதியார்
b. பாரதிதாசன் ..
c. திரு. வி. க.
d. கவிமணி

9. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை – யார் கூற்று? (2014 G4)                                a. பாரதியார்
b. பாரதிதாசன் ..
c. கண்ணதாசன்
d. முடியரசன்

10. `எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்` எனப் பொதுவுடைமையை விரும்பியவர் (2014 G4)
a. கல்யாணசுந்தரம்
b. பாரதிதாசன் ..
c. முடியரசன்
d. தமிழ்ஒளி

 3,728 total views,  64 views today

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: